< Back
மாநில செய்திகள்
44 கிராம பஞ்சாயத்துகளுக்கு 15 ஆயிரம் தேசியக்கொடிகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

44 கிராம பஞ்சாயத்துகளுக்கு 15 ஆயிரம் தேசியக்கொடிகள்

தினத்தந்தி
|
9 Aug 2022 11:28 PM IST

சுதந்திரதின அமுதப்பெருவிழாவை கொண்டாட 44 கிராம பஞ்சாயத்துகளுக்கு 15 ஆயிரம் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.

நீடாமங்கலம்:

இந்தியாவின் 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதைமுன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக மாவட்ட அளவில் அரசு அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் தேசியக்கொடிகள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் சுதந்திரதின விழாவை சிறப்பாக கொண்டாட ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் கிராமபஞ்சாயத்து தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக கிராமங்களில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக கிராமபஞ்சாயத்து தலைவர்களிடம் தேசியக்கொடியினை ஒன்றியக்குழுத்தலைவர் வழங்கினார். இதில் 15 ஆயிரம் தேசியக்கொடிகள் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்