< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் பைகள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டையில் பிளாஸ்டிக் பைகள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் உளுந்தூர்பேட்டை கடை வீதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்