< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விவசாயி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
|7 Feb 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே எடப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). விவசாயியான இவர் தனது வீட்டின் பீரோவில் நகைகள் மற்றும் பணத்தை வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.5½ லட்சமாகும்.
இதுகுறித்து ஆறுமுகம், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நகை திருட்டுப்போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.