< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயம் என தகவல்
|6 May 2023 12:33 AM IST
கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கொண்டை ஊசி வலைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 15 பேர் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து செங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.