கன்னியாகுமரி
கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் நர்சிடம் 15 பவுன் நகை அபேஸ்
|கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் நர்சிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் நர்சிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நர்சு
கருங்கல் அருகே உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரஞ்சித்சிங். இவருடைய மனைவி விமலா (வயது 38). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகி றார்.
இவர் தினமும் அரசு பஸ்சில் வேலைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
பஸ்சில் நகை மாயம்
இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு வந்து விட்டு மாலையில் பணி முடிந்ததும் அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். இதற்காக நாகர்கோவிலில் இருந்து 7 'ஏ' குற்றித்தாணி செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார்.
வழுதலம்பள்ளம் பகுதியில் பஸ் சென்றபோது விமலா கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தேடியும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர் நகையை அபேஸ் செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
போலீஸ் ேதடுகிறது
பின்னர், இதுகுறித்து விமலா கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓடும் பஸ்சில் அரசு நர்சிடம் 15 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
-**