< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் திருட்டு
|11 Dec 2022 1:59 PM IST
செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் மர்மநபர்கள் திருடி சென்றனர்.
செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர் எம்.ஏ. கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 35). இவர், அதே பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைத்து இருந்த ரூ.15 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர். அந்த பணத்தை நிலம் வாங்குவதற்காக சிறுக சிறுக செந்தில்குமார் சேமித்து வைத்து இருந்தார்.
இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.