< Back
மாநில செய்திகள்
தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தினத்தந்தி
|
23 Dec 2022 12:15 AM IST

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி கள்ளக்குறிச்சி கலெக்டர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஆகிய 2 ஒன்றியங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல், திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோமுகி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு வணிக விரிவாக்க மானிய நிதி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானிய நிதியின் கீழ் ஒருவருக்கு தனிநபர் தொழில் முனைவோருக்கான 30 சதவீத மானியத்துடன் கூடிய கடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்