< Back
மாநில செய்திகள்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

தினத்தந்தி
|
22 Dec 2022 11:53 AM IST

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒருவர் இறங்கி வந்ததை ரெயில்வே போலீசார் பார்த்தனர். உடனடியாக அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஹமது முஜீப் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 7 கிலோ கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த முருக பாண்டி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்