< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
|6 May 2023 10:20 PM IST
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.
இதனிடையே கோடை விடுமுறை வழங்கவேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது.