< Back
மாநில செய்திகள்
மகளிருக்கு ரூ.15½ கோடி சுயஉதவிக்குழு கடன்
கரூர்
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூ.15½ கோடி சுயஉதவிக்குழு கடன்

தினத்தந்தி
|
25 Aug 2023 12:14 AM IST

மகளிருக்கு ரூ.15½ கோடி சுயஉதவிக்குழு கடன் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 254 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 3,028 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.15.52 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தினுடைய ஆண்டு இலக்கு 400 கோடி அதில் இன்றைக்கு ஒரு நாளில் கிட்டத்தட்ட 15 கோடி வழங்கி இருப்பது என்பது மிகச் சிறந்த தருணம். இந்த 15 கோடி கண்டிப்பாக 150 கோடியாக பெருக்குவது தான் நீங்கள் அரசு அளிக்கக்கூடிய உதவிக்கு செய்யும் கைமாறு ஆகும், என்றார்.

பின்னர் 242 மகளிர் சுய உதவிக்குழு கொண்ட 2,715 உறுப்பினர்களுக்கு ரூ.12.64 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கடன், 303 பேருக்கு ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் மத்திய காலக்கடனும், 9 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு 40 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடன் உதவியும், ஒருவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையும் என மொத்தம் 3,028 பேருக்கு ரூ.15.52 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவினியோகத்திட்டம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்