< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அறந்தாங்கியில் 15 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
|25 May 2022 12:45 AM IST
அறந்தாங்கியில் 15 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி- காரைக்குடி சோதனைச்சாவடியில் தனிபிரிவு காவலர் திலகர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. மேலும், ஆம்புலன்சுக்கு வழி விடாமல் ஒரு கார் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்திய போது காரை ஓட்டி வந்தவர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். அதன் பின்னர் காரை சோதனை செய்ததில் 15 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்து குடிமை பொருள் வழங்கல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.