< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளிகளில் 14-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
|11 Oct 2022 2:35 AM IST
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
சென்னை,
அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படும்.
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.