< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு..!
|17 July 2022 4:47 PM IST
மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, போக்குவரத்து சீரானது. இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.