தூத்துக்குடியில் வரும் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு- மாவட்ட ஆட்சியர்
|தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், திருவிழாவில் கலந்து கொள்ள வருவோர் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது.பள்ளி, கல்லூரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேறு கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால், மாவட்ட எஸ்.பி-யிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.