< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு
|30 Aug 2023 4:22 PM IST
செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 1ல் கொண்டாடப்படுகிறது. சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்காக நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.