< Back
மாநில செய்திகள்
தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை
மாநில செய்திகள்

தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை

தினத்தந்தி
|
31 Aug 2024 9:10 AM IST

4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று (ஆக.31) மாலை 6 மணி முதல் செப். 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி 144 தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த 144 தடை அறிவிப்பின் படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று,மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்