< Back
மாநில செய்திகள்
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது
மாநில செய்திகள்

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

தினத்தந்தி
|
16 May 2024 8:41 PM IST

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

நாகை,

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 5 படகுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்