< Back
மாநில செய்திகள்
திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 1:21 AM IST

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சியில் ஏற்கனவே சிறுவன், கர்ப்பிணி உள்பட 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால் திருச்சியில் மொத்தம் 14 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்