< Back
மாநில செய்திகள்
ஒரு வாரத்தில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஒரு வாரத்தில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது

தினத்தந்தி
|
29 July 2023 8:21 AM IST

ஒரு வாரம் போலீசார் நடத்திய வேட்டையில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களின் சொத்து, வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையில் தினமும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை 839 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்