< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 13-வது நாளாக தொடரும் ஆய்வு
|20 Sept 2022 2:44 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று 13-வது நாளாக ஆய்வு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடலூர்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிபார்க்கப்பட்டு, ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தங்க நகைகள் குறித்து 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 17 ஆண்டுகளுக்கான கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அதன் அறிக்கை தயாரிக்க கடந்த 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று 13-வது நாளாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.