கள்ளக்குறிச்சி
1,373 பருத்தி மூட்டைகள் ரூ.43¼ லட்சத்துக்கு ஏலம்
|கள்ளக்குறிச்சி வார சந்தையில் 1,373 பருத்தி மூட்டைகள் ரூ.43¼ லட்சத்துக்கு ஏலம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற சந்தையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 281 விவசாயிகள் 1,373 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். தொடா்ந்து நடைபெற்ற ஏலத்தில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்ச விலை ரூ.8,562-க்கும், குறைந்த பட்சமாக ரூ.7,758-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.6,399-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,268-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,373 பருத்தி மூட்டைகள் ரூ.43 லட்சத்து 29 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இந்த சந்தையில் திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, ஆகிய ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி முட்டைகளை வாங்கி சென்றனர். இத்தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் கூறியுள்ளார்.