< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
137 பேர் 100-க்கு 100 மதிப்பெண்
|20 May 2023 2:56 AM IST
137 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் யாரும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 53 பேரும், அறிவியல் பாடத்தில் 81 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 2 பேரும் என மொத்தம் 137 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் சூப்பர்-30 என்ற சிறப்பு வகுப்பில் பயின்ற 66 மாணவ-மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 57 பேர் 500-க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 89 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.