< Back
மாநில செய்திகள்
சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
மாநில செய்திகள்

சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

தினத்தந்தி
|
29 May 2024 5:32 PM IST

சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்வதற்கு 1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை,

நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்திலேயே அதிகபட்ச விண்ணப்பங்கள் சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்திருக்கின்றன. கடந்தாண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 80 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்தும், 53 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவிகளிடமிருந்தும் பெறப்பட்டிருப்பதாக கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்