< Back
மாநில செய்திகள்
133 குவாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்
விருதுநகர்
மாநில செய்திகள்

133 குவாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தினத்தந்தி
|
4 Oct 2023 1:37 AM IST

133 குவாரிகள் இன்று முதல் வேைல நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கனிம வள துணை இயக்குனர் தங்க முனிய சாமியை சந்தித்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி மாவட்டத்தில் 27 குவாரிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடை சீட்டு 10 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

தற்போது மேலும் 5 நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில் குவாரி குத்தகைதாரர்கள் சங்க பொதுச்செயலாளர் நாராயண பெருமாள் சாமி உறுதி அளித்தபடி நடைச்சீட்டு வழங்காத நிலையில் இன்று முதல் மாவட்டத்தில் உள்ள 133 குவாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்