< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 வேதியியல் தேர்வை 13,114 பேர் எழுதினர்
விருதுநகர்
மாநில செய்திகள்

பிளஸ்-2 வேதியியல் தேர்வை 13,114 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
4 April 2023 1:22 AM IST

பிளஸ்-2 வேதியியல் தேர்வினை 13,114 பேர் எழுதினர். 468 பேர் வரவில்லை.


பிளஸ்-2 வேதியியல் தேர்வினை 13,114 பேர் எழுதினர். 468 பேர் வரவில்லை.

இறுதி நாள்

பிளஸ்-2 தேர்வு நேற்று முடிந்தது. நேற்று வேதியியல், கணக்கியல், புவியியல் ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் 9,814 மாணவர்கள், 11,436 மாணவிகள் ஆக மொத்தம் 21,250 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 9,228 மாணவர்களும், 11,055 மாணவிகளும் ஆக மொத்தம் 20,283 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 586 மாணவிகளும் 381 மாணவர்களும் ஆக மொத்தம் 967 தேர்வு எழுத வரவில்லை. பாடவாரியாக தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:- வேதியியல் தேர்வில் 5,969 மாணவர்களும், 7,613 மாணவிகளும் ஆக மொத்தம் 13,582 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 5,678 மாணவர்களும், 7,436 மாணவிகளும் ஆக மொத்தம் 13,114 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 291 மாணவர்களும், 177 மாணவிகளும் ஆக மொத்தம் 468 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கணக்கியல்

கணக்கியல் பாடப்பிரிவு தேர்வினை 3,639 மாணவர்களும், 3,693 மாணவிகளும் ஆக மொத்தம் 7,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,354 மாணவர்களும், 3,502 மாணவிகளும் ஆக மொத்தம் 6,856 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 285 மாணவர்களும், 191 மாணவிகளும் ஆக மொத்தம் 476 பேர் தேர்வு எழுத வரவில்லை.

புவியியல் பாடப்பிரிவு தேர்வினை 206 மாணவர்களும், 130 மாணவிகளும் ஆக மொத்தம் 336 பேர் எழுத வேண்டிய நிலையில் 196 மாணவர்களும், 117 மாணவிகளும் ஆக மொத்தம் 313 பேர் தேர்வு எழுதினர். 10 மாணவர்களும், 13 மாணவிகளும் ஆக மொத்தம் 23 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்