< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
131 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
|1 Jun 2022 12:21 AM IST
திருப்பத்தூரில் 131 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி 131 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதில் க.தேவராஜி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் விஜயா, திருமதி, வெண்மதி, சத்யா, சுரேஷ்குமார், சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.