< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்..!
|17 Aug 2022 9:55 AM IST
வாடகையை கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்
சென்னை,
சென்னை, பாரிமுனையில் ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் உள்ள . இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகள் உள்ள நிலையில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது .
இதையத்து, நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை.நிலுவை தொகையாக அந்த 130 கடைகளில் இருந்து மட்டும் 40 லட்சம் ரூபாய் வர வேண்டி உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக அந்த 130 கடைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.
வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்