சென்னை
வடபழனியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாயின் 2-வது கணவர் கைது
|வடபழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது 13 வயது மகள் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷேர் ஆட்டோ டிரைவரான முருகன் (வயது 53) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வரும் முருகன் தனிமையில் இருந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி முருகனின் அத்துமீறல் குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகனிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது தாய், மகள் இருவருக்கும் முருகன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து மகளுக்கு தனது 2வது கணவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு நல உதவி மையத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் புகார் கூறினார்.
இந்த நிலையில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.