< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை 13 ஆயிரத்து 535 பேர் இணைத்துள்ளனர்
கரூர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை 13 ஆயிரத்து 535 பேர் இணைத்துள்ளனர்

தினத்தந்தி
|
1 Dec 2022 12:25 AM IST

கரூர் மாவட்டத்தில் இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை 13 ஆயிரத்து 535 பேர் இணைத்துள்ளனர் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும். இதில் கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 879 வீட்டு மின் இணைப்புகளும், 12 ஆயிரத்து 971 குடிசை வீடுகளின் மின் இணைப்புகளும், 53 ஆயிரத்து 87 விவசாய பம்பு செட் மின் இணைப்புகளும் உள்ளன. இதில் கடந்த 28-ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 535 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

சிறப்பு கவுண்டர்கள்

இதற்காக மாவட்டம் முழுவதும் 53 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு, அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. மேலும் மக்கள் அதிகமாக வந்தால் சிறப்பு கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும் ஆதாரை இணைப்பதற்காக கரூரில் கோவை-ஈரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம், தாந்தோணிமலை, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருவதாக கரூர் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்