< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
|11 Oct 2023 1:47 AM IST
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு போனது.
கரூர் அருகே உள்ள வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவத்தன்று இவர் கரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.