திருச்சி
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
|தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டுபோனது.
13 பவுன் நகைகள் திருட்டு
திருவெறும்பூர் அருகே உள்ள ஐயன்புத்தூர் கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் தனபால். இவர் தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு தீபாவளிக்கு ஜவுளி வாங்க திருச்சி கடைவீதிக்கு சென்றுள்ளனர்.பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு, வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து நவல்பட்டு போலீசில் தனபால் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.