< Back
மாநில செய்திகள்
அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தினத்தந்தி
|
5 April 2023 1:06 PM IST

பொன்னேரி அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொன்னேரி அருகே லிங்கையப்பன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி மதிராசம்மா (வயது 62). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கும் போல் மதிராசம்மா கடைக்கு வெளியே பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மதிராசம்மாவின் கழுத்தில் இருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

அதேபோல் பொன்னேரி அருகே உள்ள வெள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்த சரோஜாம்மாள் (70) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து மேற்கண்ட 2 பேரும் பொன்னேரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து மூதாட்டிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்