< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்

தினத்தந்தி
|
4 Aug 2023 10:25 PM IST

இன்று தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் ஒருசில இடங்களில் வெப்பமும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, இன்று தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

அதாவது, மதுரை, தூத்துக்குடியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், கடலூரில் 103 டிகிரி பாரன்ஹீட், திருச்சி, பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட், புதுவையில் 101 டிகிரி பாரன்ஹீட், சென்னை, திருத்தணி, பாளையங்கோட்டை, தஞ்சையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்