< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவால் பாதிப்பு
|18 Aug 2022 1:15 AM IST
கடலூர் மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 74 ஆயிரத்து 394 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளனது. மேலும் நேற்று மட்டும் 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 131 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.