காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள்
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 22 ஆயிரத்து 152 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா பெற்றுக் கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
ஆண் வாக்காளர்கள்- 6 லட்சத்து 43 ஆயிரத்து 747. பெண் வாக்காளர்கள்- 6 லட்சத்து 78 ஆயிரத்து 224. மூன்றாம் பாலினத்தவர்கள்- 181 பேர் என மொத்தம் 13 லட்சத்து 22 ஆயிரத்து 152 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதிதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி
ஸ்ரீ்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,394 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
ஆலந்தூர்
ஆண்கள்- 1,88,755
பெண்கள்- 1,93,024
மூன்றாம் பாலினத்தவர்- 55
மொத்தம்- 3,81,834
ஸ்ரீபெரும்புதூர் (தனி)
ஆண்கள்- 1,76,753
பெண்கள்- 1,86,754
மூன்றாம் பாலினத்தவர்-61
மொத்தம்- 3,63,568
உத்திரமேரூர்
ஆண்கள்- 1,28,157 ஆண் வாக்காளர்களும்,
பெண்கள்- 1,37,825
மூன்றாம் பாலினத்தவர்- 46
மொத்தம்- 2,66,028
காஞ்சீபுரம்
ஆண்கள்- 1,50,082
பெண்கள்-1,60,621
மூன்றாம் பாலினத்தவர்- 19
மொத்தம்-3,10,722
வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.