< Back
மாநில செய்திகள்
தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
மாநில செய்திகள்

தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்

தினத்தந்தி
|
23 Feb 2024 1:57 AM IST

தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை,

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று பதில் அளித்து பேசினர். அதனை தொடர்ந்து, சட்டசபையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 13 சட்ட மசோதாக்கள் நேற்று ஒரே நாளில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் மசோதா, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுவும் மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கழிவுநீர் மேலாண்மை பிரிவை திருத்துவதற்கான மசோதா உள்பட 13 சட்ட மசோதாக்கள் இடம் பெற்றிருந்தது.

மேலும் செய்திகள்