< Back
மாநில செய்திகள்
127 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம்; அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

127 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம்; அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்

தினத்தந்தி
|
19 March 2023 12:15 AM IST

திருச்செந்தூரில் 127 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் 127 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

சத்துணவு பெட்டகம்

திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 127 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர், காயாமொழி வள்ளுவர் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காயாமொழி ராமநாதபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியம் ரூ.10.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர், தஞ்சாவூர் தேவி இன்னோ வெஞ்சர் எல்.எல்.பி. நிறுவனம் சார்பில் காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே எந்திரத்தையும், அதற்குரிய மற்ற உபகரணங்கள் என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தேவி இன்னோ வெஞ்சர் எல்.எல்.பி. நிறுவன சேர்மன் வி.எஸ்.நடராஜன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் பொற்செல்வன், தாசில்தார் சுவாமிநாதன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சரஸ்வதி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாய்ஸ்ரீ, மருத்துவ அலுவலர்கள் பாஸிநூகு, அம்பிகாபதி திருமலை, அஜய், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன்,

கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் வேலவன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வி.ராயன், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன், அரசு வழக்கறிஞர் சாத்ராக், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, திருச்செந்தூர் நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்