< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
14 நாட்களில் 1.25 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
|21 Dec 2023 11:34 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை,
சென்னை கூவம் ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு மிகுந்த நன்றி தெரிவிப்பதாக கூறினார். கடந்த 14 நாட்களில் 1.25 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நீர் வழிகளை குப்பைத் தொட்டிகளாக பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.