< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1¼ கோடி வசூல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1¼ கோடி வசூல்

தினத்தந்தி
|
30 Sept 2022 6:53 PM IST

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.1¼ கோடி வசூலானது.

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம்படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி சென்றனர்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல் பணம் மற்றும் திருத்தணிமுருகன் கோவில் உடன் இணைந்த உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தையும் எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.

உண்டியல் காணிக்கை

இந்த நிலையில் கோவிலின் 33 நாள் உண்டியல் காணிக்கை கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் திருக்கோவில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. இதில் மூலம் ரூ.1 ஒரு கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 1,060 கிராம், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் செய்திகள்