< Back
மாநில செய்திகள்
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1,200 கனஅடி நீர் வெளியேற்றம்-தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை குவியல் தொடர்கிறது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1,200 கனஅடி நீர் வெளியேற்றம்-தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை குவியல் தொடர்கிறது

தினத்தந்தி
|
21 May 2022 10:54 PM IST

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை குவியல் தொடர்கிறது.

ஓசூர்:

கர்நாடக மாநிலம் மற்றும், ஓசூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தவாறு உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1,086 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் உபரிநீரில் ரசாயன கழிவுகள் கலந்து, நுரை பொங்கி மலைபோல் குவிந்துள்ளது.

மேலும் காற்றில் பறந்து ஆங்காங்கே படர்ந்தவாறு உள்ளதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருவதால் கிராம மக்களும், விவசாயிகளும் கவலையும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்