< Back
மாநில செய்திகள்
சேலம்: நிதி நிறுவனத்தில் 1.20 லட்சம் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை..!
மாநில செய்திகள்

சேலம்: நிதி நிறுவனத்தில் 1.20 லட்சம் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை..!

தினத்தந்தி
|
25 July 2022 2:41 PM IST

சேலம் அருகே நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு லாரி பட்டறை உள்ளது. இதன் அருகில் லாரி பட்டைரையின் ஒரு பகுதியில் ஒரு பைனான்ஸ் நிறுவனமும் இயங்கி வருகிறது .

இதனை வேலன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரவு வழக்கம் போல பணியை முடித்துவிட்டு உரிமையாளர் வீட்டிற்கு திரும்பினார். ஊழியர் மட்டும் நிறுவனத்தின் மேல் பகுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அந்த நிறுவனத்தின் மேல் மாடியில் படுத்திருந்தவர், உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் அவர் வந்து சேர்வதற்குள் அந்த மர்ம நபர்கள் மூன்று பேரும் அங்கிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு பதிவாகியுள்ள கைரேகை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்