< Back
மாநில செய்திகள்
ரூ.1.20 கோடி வளர்ச்சித்திட்ட பணிகள்
அரியலூர்
மாநில செய்திகள்

ரூ.1.20 கோடி வளர்ச்சித்திட்ட பணிகள்

தினத்தந்தி
|
29 July 2023 6:12 PM GMT

ரூ.1.20 கோடி வளர்ச்சித்திட்ட பணிகளை எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சிக்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் வடக்கு தெருவில் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோழன்மாதேவி பழைய காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், சோழன்மாதேவி காலனி மயானத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கல்வெர்ட், சுற்றுச்சுவர் மற்றும் தரைதளம் அமைத்தல் உள்பட ரூ.1.20 கோடி மதிப்பிலான பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் சோழமாதேவி பழைய காலனி தெருவில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்குழாய் அமைப்பதற்காக ஜெயங்கொண்டம் துரை&கோ அண்ட் ஸ்ரீ லட்சுமி வாட்டர் வெல்த் கம்பெனி குழுவினரால் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன், சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன், அருள் மற்றும் ஜெயங்கொண்டம் துரை&கோ அண்ட் ஸ்ரீ லட்சுமி வாட்டர் வெல்த் கம்பெனி உரிமையாளர்கள் ராஜாராமன், ரவிக்குமார் மற்றும் இடங்கண்ணி தலைவர் ஷீலா இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்