ஈரோடு
விதிமுறைகளை மீறி இயக்கிய 12 வாகனங்கள் பறிமுதல்
|ஈரோட்டில் விதிமுறைகளை மீறி இயக்கிய 12 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோட்டில் விதிமுறைகளை மீறி இயக்கிய 12 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன தணிக்கை
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவின் உத்தரவின்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ம.பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேந்தரகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் 847 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில் 97 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
12 வாகனங்கள் பறிமுதல்
தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, ஒட்டுனர் உரிமம் முதலியவை நடப்பில் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 10 வாகனங்களும், ஈரோடு மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல், சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகை வாகனமாக பயன்படுத்தியது தொடர்பாக 2 வேன்களும் என மொத்தம் 12 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் சட்டத்துக்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், அவ்வாறு இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவைநாதன் தெரிவித்துள்ளார்.