< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்
|3 Jun 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்
விழுப்புரம்
விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், நேற்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, நேருஜி சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 12 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1,160 வீதம் மொத்தம் ரூ.13 ஆயிரத்து 920-ஐ அபராதமாக விதித்தனர்.