< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கிய 3 பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு
|25 Feb 2023 2:18 AM IST
வீட்டில் தூங்கிய 3 பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
குன்னம்:
சங்கிலிகள் பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உள்ள கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி சரோஜா மற்றும் அவரது உறவினரான அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, காரைப்பாடியை சேர்ந்த புவனா ஆகியோர் பூமாலை வீட்டின் முன்பக்கத்தில் இரவில் படுத்து தூங்கினர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் கேட்டை திறந்து வரண்டா உள்ளே சென்று சரோஜா, தனலட்சுமி, புவனா ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 12 பவுன் சங்கிலிகளை பறித்தனர்.
போலீசார் விசாரணை
இதனால் திடுக்கிட்டு விழித்த 3 பேரும், சங்கிலியை மீட்பதற்காக போராடினர். அப்போது அவர்களை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.