< Back
மாநில செய்திகள்
காந்திமார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிபட்டன
திருச்சி
மாநில செய்திகள்

காந்திமார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிபட்டன

தினத்தந்தி
|
11 Sep 2022 8:57 PM GMT

காந்திமார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிபட்டன.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர்கள் கார்த்திகேயன், டேவிட்முத்துராஜ், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை காந்திமார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 12 மாடுகளை பிடித்து, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கனரக வாகனத்தில் ஏற்றினர்.

இதையடுத்து விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடுகளை சாலையில் திரிய விட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத நடவடிக்கைக்கு பிறகும் மாடுகளை சாலைகளில் திரியவிட்டால் அடுத்தகட்டமாக மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்