< Back
மாநில செய்திகள்
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
24 Jun 2022 3:47 PM IST

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் இடஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு முறை உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்கப்படுகிறது என்றாலும் பள்ளிகளில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவது இல்லை. மேலும் பல அரசுப் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளிலும் அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்ற கருத்தை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு உத்தரவை கல்வி ஆணையர் பிறப்பித்திருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்