< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 1,176 அடுக்குமாடி குடியிருப்புகள்;  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 1,176 அடுக்குமாடி குடியிருப்புகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
8 Dec 2022 3:23 AM IST

ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1,176 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1,176 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் 15 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த விழாவில், தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர், பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும், குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரய பத்திரங்களையும் வழங்கினார்.

1,176 வீடுகள்

அதன்படி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பவானி பகுதியில் 492 வீடுகளும், பெருந்துறை பகுதியில் 204 வீடுகளும், மொடக்குறிச்சி பகுதியில் 96 வீடுகளும், கொடுமுடி பகுதியில் 276 வீடுகளும், சத்தியமங்கலம் பகுதியில் 108 வீடுகளும் என மொத்தம் 1,176 வீடுகள் ரூ.101 கோடியே ஒரு லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள இந்த வீடுகளை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். 1,176 வீடுகளில் 541 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 635 வீடுகள் விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்