< Back
மாநில செய்திகள்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 தமிழக மீனவர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்
மாநில செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 தமிழக மீனவர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்

தினத்தந்தி
|
17 April 2023 6:20 PM IST

மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மார்ச் 22ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து 11 மீனவா்களும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து உணவு பொருட்கள் தந்து வரவேற்றனர்.

பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்