கள்ளக்குறிச்சி
11 போலீசார் இடமாற்றம்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 போலீசார் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் தனிப்பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கும், அங்குள்ள சரவணக்குமார் கீழ்குப்பம் தனி பிரிவுக்கும், உளுந்தூர்பேட்டை தனிப்பிரிவு போலீஸ்காரர் சரவணன் திருநாவலூர் தனிப்பிரிவுக்கும், எடைக்கல் தனிப்பிரிவு போலீஸ்காரர் அழகுசெந்தில் முருகன் உளுந்தூர்பேட்டை தனி பிரிவுக்கும், தியாகதுருகம் போலீஸ்காரர் ஆனந்தன் எடைக்கல் தனி பிரிவுக்கும், திருநாவலூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மனோகரன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் திருக்கோவிலூர் தனி பிரிவு போலீஸ்காரர் சிவபாலன் பகண்டை கூட்டுரோடு தனிப்பிரிவுக்கும், திருப்பாலப்பந்தல் தனிப்பிரிவு போலீஸ்காரர் கோபி மணலூர்பேட்டை தனிப்பிரிவுக்கும், இங்குள்ள தனிப்பிரிவு போலீஸ்காரர் ராமச்சந்திரன் திருப்பாலப்பந்தல் தனிப்பிரிவுக்கும், பகண்டை கூட்டுரோடு தனிப்பிரிவு போலீஸ்காரர் அய்யப்பன் திருக்கோவிலூர் தனிப்பிரிவுக்கும், தியாகதுருகம் போலீஸ்காரர் சந்தோஷ் மூங்கில்துறைப்பட்டு தனிப்பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பிறப்பித்துள்ளார்.